செபஸ்தியார் தேவாலய திருவிழா தேர் பவனி
குன்னுார்;குன்னுார் புனித செபஸ்தியார் தேவாலய பங்கு திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன், துவங்கியது.தினமும் ஜெபமாலை, ஆராதனை, திருப்பலி, நவநாள் ஜெபம், நற்கருணை பவனி ஆகியவை நடந்தன. திருவிழா நாளில் கரிம்பில் புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை மார்டின் புதுசேரி, பிரான்சிஸ் ஆன்டணி, குன்னுார் புனித அந்தோணியார் தேவாலய பங்கு தந்தை யுஜின் நியூமேன் ஜோசப், உதவி பங்குதந்தை ஸ்டாலின் தலைமையில், ஆடம்பர திருநாள் திருப்பலி, புனிதருக்கான ஜெபம், பாடல் திருப்பலி நடந்தது.தொடர்ந்து புனிதரின் திருவுருவம் தேர் பவனி குன்னுார் பஸ் ஸ்டாண்ட் மேடைக்கு வந்தது. நற்கருணை, ஆசிர்வாதம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.