உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சென்னியாண்டவர் கோவில் அறங்காவலர் குழு தேர்வு

சென்னியாண்டவர் கோவில் அறங்காவலர் குழு தேர்வு

கருமத்தம்பட்டி:விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் பல ஆண்டுகளாக அறங்காவலர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், அறங்காவலர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பரிசீலனைக்கு பின், உறுப்பினர்களாக சாந்தா சின்னசாமி, தங்கராஜ், ஜெயப்பிரியா, பொன்னுசாமி, முருகன் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, அறங்காவலர் குழு தலைவராக சாந்தா சின்னசாமியை தேர்வு செய்தனர். இந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் ( பொறுப்பு)மேனகா, துறை ஆய்வாளர் தமயந்தி, சென்னியாண்டவர் கோவில் செயல் அலுவலர் தன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை