உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கட்டி முடித்த பள்ளி கட்டடம் திறக்க கையெழுத்து இயக்கம்

கட்டி முடித்த பள்ளி கட்டடம் திறக்க கையெழுத்து இயக்கம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை திறக்க கையெழுத்து இயக்கம் நடந்தது.பந்தலுார் அருகே, தேவாலா பகுதியில் அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிக்கு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. அந்த கட்டடம் திறக்கப்படாமல் தற்போது பாழடைந்து புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. 'கட்டடம் முழுமையாக பாதிக்கப்படும் முன்னர் திறந்து செயல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பந்தலுார் ஏரியா கமிட்டி சார்பில், கவனஈர்ப்பு கையெழுத்து இயக்கம் தேவாலா பஜாரில் நடந்தது. ஏரியா கமிட்டி செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தலைவர் மணிகண்டன் துவக்கி வைத்தார். துணை தலைவர் ஹசைன் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வர்கீஸ், வாலிபர் சங்க பொருளாளர் செரீப், தேவாலா கிளை செயலாளர் ஷாஜி, ரெஜிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை