உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதிய பஸ்கள் பல்வேறு வழித்தடத்தில் இயக்கம் 45 ஓட்டுனர்களுக்கு வெள்ளிப்பதக்கம்

புதிய பஸ்கள் பல்வேறு வழித்தடத்தில் இயக்கம் 45 ஓட்டுனர்களுக்கு வெள்ளிப்பதக்கம்

ஊட்டி:ஊட்டி மண்டலத்தில் பல்வேறு வழித்தடத்தில், 16 புதிய பஸ்கள் இயக்கப்பட்டது. ஊட்டி மண்டலத்தின் கீழ், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், மேட்டுப்பாளையம் கிளைகளுக்கான புதிய பஸ்கள் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதி உதவி மூலம், 8.32 கோடி ரூபாய் நிதியில், 16 புதிய பஸ்கள் வாங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி., ராஜா ஆகியோர் பங்கேற்று பல்வேறு வழித்தடத்திற்கான புதிய பஸ்களை இயக்கி வைத்தனர். மேலும், புதிய வழித்தடம், நிறுத்தப்பட்ட வழித்தட இயக்கம், வழித்தட நீடிப்பு இயக்கம், கூடுதல் நடைகள் இயக்கம் உள்ளிட்ட வழித்தட பஸ்களும் இயக்கப்பட்டது. பணி காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், 3 ஓட்டுனர்கள் மற்றும் 10 நடத்துனர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. பணியின் போது, 25 ஆண்டுகள் விபத்தில்லாமல் பணிபுரிந்த 7 ஓட்டுனர்களுக்கு தங்கப்பதக்கமும், 10 ஆண்டுகள் விபத்தில்லாமல் பணிபுரிந்த 322 ஓட்டுனர்களில் கிளைக்கு ஒருவர் வீதம், 45 ஓட்டுனர்களுக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை