உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பனியில் கருகிய தேயிலை தோட்டங்கள்: விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு

பனியில் கருகிய தேயிலை தோட்டங்கள்: விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு

ஊட்டி;ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பனிப்பொழிவு அதிகரித்ததால், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்கள் கருகின.நீலகிரி மாவட்டத்தில் டிச., முதல் பிப்., இறுதிவரை பனிப்பொழிவு இருக்கும். நடப்பாண்டு, மழை, மேகமூட்டமான காலநிலை நிலவியதால், பனிப்பொழிவு குறைந்திருந்தது. பள்ளத்தாக்கு பகுதிகளில் மட்டும், லேசான பனிப்பொழிவு இருந்தது. இதில், ஆங்காங்கு தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் கருகின.கடந்த இரண்டு நாட்களாக, கடுமையான குளிர் நிலவுகிறது. அதிகப்பட்ச வெப்பநிலை, ஒரு டிகிரி செல்சியசாக தொடருகிறது. இந்நிலையில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மற்றும் குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக உறைபனி தாக்கியது.ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் தேயிலை தோட்டங்கள் கருகி உள்ளன. குறிப்பாக, ஊட்டி வேலிவியூ பகுதியில் தேயிலை தோட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதனால், பசுந்தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.பனியில் கருகிய தோட்டங்களில், இலைகள் உதிர்ந்து, தேயிலை செடிகளில் குச்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அரும்புகள் துளிர் விட்டு தோட்டங்கள் பழைய நிலைக்கு வரவேண்டும் எனில், இனிவரும் நாட்களில் மழை பெய்தாக வேண்டும். அதுவரை, பசுந்தேயிலை வரத்து இருக்காது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை