உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நவீன முறையில் குறுமிளகு சாகுபடி: விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

நவீன முறையில் குறுமிளகு சாகுபடி: விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

கூடலுார்:கூடலுாரில், நவீன முறையில் குறுமிளகு சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.கூடலுார், பந்தலுார் பகுதியின் மண்வளம், காலநிலை குறுமிளகு விளைச்சலுக்கு உகந்ததாக உள்ளது. விவசாயிகள் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக குறுமிளகு பயிரிட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர்.இந்நிலையில், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறுமிளகு சாகுபடி செய்வது குறித்து, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நறுமண மற்றும் மலை தோட்டப்பயிர்கள் துறை, தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கேரளா கோழிக்கோடு நறுமண பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் சார்பில், கூடலுாரில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.பல்கலைக்கழக துறை தலைவர் ராஜேஸ்ரீ வரவேற்றார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் வெங்கடேஷ் தலைமை வகித்து பேசினார்.தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில், 'மிளகு சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள்' குறித்து பேராசிரியர் வெங்கடேஷ் விளக்கினார். தொடர்ந்து, மிளகு பதப்படுத்துதல், மிளகு செடிகளை தாக்கும் பூச்சி, மிளகு சாகுபடி விரிவு படுத்துவதற்கான மாநில அரசின் திட்டங்கள் குறித்து பலர் பேசினர்.பொன்னுார் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பிரசன்னகுமார் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். பேராசிரியர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை