மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
18 hour(s) ago
சூலுார்:சூலுார் ஸ்ரீ வற்றியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.சூலுார் புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஸ்ரீ வற்றியம்மன் கோவில், நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. கடந்த, 19ம் தேதி முகூர்த்த கால் வைத்தலுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.நேற்று காலை 7:30க்கு, நான்காம் கால ஹோமம், நாடி சந்தானம், திருமுறை பாராயணம் நடந்தன. பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 9:00 மணிக்கு, விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ வற்றியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மகா அபிஷேகம், தச தான, தரிசன பூஜைக்கு பின், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
18 hour(s) ago