மேலும் செய்திகள்
மே 5 வணிகர் தினம் தமிழக அரசு அறிவிப்பு
06-Jun-2025
கூடலுார் ; கூடலுாரில் பிளஸ்-2 பொது தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு வணிகர் நல அறக்கட்டளை சார்பில், 49 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.கூடலுார் நகர பகுதியில், பிளஸ்-2 பொது தேர்வில் சாதிக்கும் வியாபாரி சங்க உறுப்பினர்கள் குழந்தைகள், அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு, வணிகர் நல அறக்கட்டளை மற்றும் நகர வணிகர் சங்கம் சார்பில், பரிசளிப்பு விழா சங்க கட்டடத்தில் நடந்தது.அறக்கட்டளை செயலாளர் ரசாக் வரவேற்றார். கந்தையா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் தாமஸ் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு மற்றும் பணம் முடிப்பு வழங்கினர். அதன்படி, வணிகர் சங்க குடும்பத்தில் சாதித்த மாணவர்கள் அஸ்வின் டென்னி, நந்தினி, விஷ்ணு வெங்கடேஷ் ஆகியோருக்கு முறையே, 10 ஆயிரம், 5000, 3000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. அரசு பள்ளியில் படித்து சாதித்த ஆதர்ஷ், பவதாரணி, ஷிஹானா ஆகியோருக்கு முறையே,10 ஆயிரம், 5000, 3000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. தனியார் பள்ளியில் படித்து சாதித்த அக்ஷயா திலீப், நிவேத் மற்றும் பிரவீனா, முகமது ஸ்பாக் ஆகியோருக்கு முறையை, 5000, 3000 2000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. விழாவில், அறக்கட்டளை பொருளாளர் பிரதாப், வணிகர் சங்க செயலாளர் சம்பத், பொருளாளர் ஆனந்த், பாதுஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
06-Jun-2025