உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பந்தலுாரில் துணை சமரச மையம் துவக்கம்: மக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

 பந்தலுாரில் துணை சமரச மையம் துவக்கம்: மக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

பந்தலுார்: பந்தலுார் நீதிமன்றத்தில் துணை சமரச மையம் துவக்கி வைக்கப்பட்டது. பந்தலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் துணை சமரச மையத்தை, சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி மனிந்த்ராமோகன் ஸ்ரீவஸ்தவா 'வீடியோ' கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநில சமரச மைய உத்தரவு அடிப்படையில், துவக்கப்பட்டுள்ள இந்த சமரச மையத்தில், 'தனிநபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து, காசோலை தகராறு, மின்வாரிய பிரச்னை, உரிமையியல் இதர வழக்குகள், அரசுத் துறைகள் மீதான வழக்குகள், தொழிலாளர் சம்பந்தமான வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவை இல்லாத பிரச்னைகள்,' உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு காண முடியும். பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை, நீதிமன்றம் வாயிலாக சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ள இந்த மையம் உதவும். இதனை மக்கள் பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், நீதிபதி பிரபாகரன் மற்றும் அரசு தரப்பு வக்கீல் நவ்ஷாத், வக்கீல்கள் அப்சல்ஜா, ஷினுவர்கீஸ், சிவசுப்ரமணியம், கணேசன், சவுகத், மோகன்ராஜ் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், போலீசார், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ