உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தீர்ப்பை கேட்டு விஷம் குடித்த தொழிலாளி ஊட்டி கோர்ட்டில் திடீர் பரபரப்பு

தீர்ப்பை கேட்டு விஷம் குடித்த தொழிலாளி ஊட்டி கோர்ட்டில் திடீர் பரபரப்பு

ஊட்டி:பாலியல் பலாத்கார வழக்கில், 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளி, ஊட்டி கோர்ட்டில் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், குன்னுாரை சேர்ந்த கூலி வேலை செய்யும் தம்பதிக்கு, 17 வயதில் ஒரு மகள் உள்ளார். மாணவியின் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு தனியாக சென்று விட்டதால், மாணவி தாயாருடன் தனியாக வசித்து வந்தார். கடந்த, 2022ம் ஆண்டு, டிச., மாதம் மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, வயிறு வலி அதிகமானதால் உடனடியாக, குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவியின் தாயார், குன்னுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குணசேகரன், 55, என்ற கூலி தொழிலாளி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 2022 ம் ஆண்டு டிச. 19ல் கைது செய்தனர். பின், குணசேகரன் ஜாமினில் வெளியில் வந்தார்.இந்த வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட குணசேகரனுக்கு, 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.தொடர்ந்து, கோர்ட்டில் உள்ள குற்றவாளி கூண்டில் இருந்து, கைதியை காத்திருப்பு அறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, ஏற்கனவே தனது பையில் இருந்த விஷத்தை உட்கொள்ள குணசேகரன் முயற்சி செய்தார். இதை பார்த்த போலீசார் உடனடியாக தட்டி விட முயன்றனர். எனினும், போலீஸ் ஒருவரின் கையை கடித்து விட்டு, அவர் விஷத்தை உட்கொண்டார்.மயங்கிய அவரை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஊட்டி கோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை