உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி

 தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி

ஊட்டி: தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட நாள் (டிச., 27) ஆண்டுதோறும், தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா, ஊட்டி ரயில் நிலையம் பகுதியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது, மத்திய பஸ் நிலையம், மாரியம்மன் கோவில், கமர்சியல் சாலை வழியாக, சேரிங்கிராஸ் காந்தி சிலையை அடைந்தது. பேரணியில், 'செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், ஊட்டி அரசு கலைக் கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்,' என, 100க்கும் மேற்பட்டோர் பதாகைகளுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் விக்னேஷ், தமிழ் ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக தன்னார்வலர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்