உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை வாரியத்தால் பள்ளி வளாகம் பளிச்

தேயிலை வாரியத்தால் பள்ளி வளாகம் பளிச்

கூடலூர்: கூடலூர் டி.கே.பேட்டை ஊராட்சி பள்ளி வளாகத்தை தேயிலை வாரிய அதிகாரிகள் துாய்மைப்படுத்தினர். தேயிலை வாரிய அலுவலகம் சார்பில், இந்தியாவில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் சிறப்பு தூய்மை பிரசாரமான 'ஸ்வச்சதா பக்வாடா - 2025' திட்ட நிகழ்ச்சி கூடலூர் டி.கே., பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்தது. பள்ளி வளாகத்தை தேயிலை வாரிய அதிகாரிகள் சுத்தம் செய்து, தூய்மை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேயிலை வாரிய மேம்பாட்டு அலுவலர் அஞ்சலி தலைமையில், அலுவலர்கள் மாணவர்கள் சுற்றுச்சூழல் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். பள்ளிக்கு துாய்மை பணிக்கான பொருட்களை மேம்பாட்டு அலுவலர் அனுபம் பெஸ்போரா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை