தாலப்பொலி மகோற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோத்தகிரி: கோத்தகிரி கடை வீதி ஸ்ரீ ஐயப்பன் கோயிலில், தாலபொலி மகோற்சவத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. கோத்தகிரி கடைவீதியில், பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஐயப்பன் பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கோவிலில், 5ம் ஆண்டு தாலப்பொலி மகோற்சவம் சிறப்பாக நடந்தது. செண்டை மேளம், பஞ்ச வாத்தியம் முழங்க சிறப்பு பூஜை நடந்தது. இரவு, ஐயனின் புலி வாகன திருவீதி உலா நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அத்தாழ பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர். இதேபோல, ஊட்டி ஸ்ரீ ஐயப்ப பஜனை சபா சார்பில், 71ம் ஆண்டு திருத்தேர் விழாவில், ஐயனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது. அதிகாலை முதல், ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று, ஐயனை வழிப்பட்டனர். ஐயனின் புலி வாகன திருவீதி உலா நகரின் பல்வேறு பகுதி களுக்கும் சென்று, இரவு கோவிலை வந்தடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.