மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
கூடலுார்;முதுமலை, தொரப்பள்ளி அருகே தனியார் விடுதிக்கு செல்வதற்காக வந்த சுற்றுலா பயணிகள், 'கூகுள் மேப்' தவறாக காட்டிய வழியில், வனப்பகுதிக்குள் சென்றனர்.கூடலுார்- தொரப்பள்ளி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்காக, கர்நாடகாவை சேர்ந்த இளம் தம்பதிகள் முன்பதிவு செய்துள்ளனர்.அவர்கள், நேற்று முன்தினம் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு, கூடலுார் நோக்கி வந்துள்ளனர். தனியார் விடுதிக்கு செல்ல, 'கூகுள் மேப்' பயன்படுத்தி காரை இயக்கி உள்ளனர். முதுமலை தொரப்பள்ளி வன சோதனை சாவடி அருகே, கார் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. அப்போது, சோதனை சாவடியில் பணியில் இருந்த வன ஊழியர்கள், அனுமதியின்றி வனச்சாலையில் கார் செல்வது அறிந்து சப்தமிட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் திரும்பி வந்துள்ளனர்.வன ஊழியர்கள் நடத்திய விசாரணையில், 'கூகுள் மேப்' தவறாக வழிகாட்டியதால், அந்த சாலையில் சென்றது தெரியவந்தது. அதன்பின், வனத்துறையினர் அவர்களுக்கான வழியை தெரிவித்து அனுப்பி வைத்தனர்.உள்ளூர் மக்கள் கூறுகையில்,'கூடலுார் பகுதியில், கடந்த மூன்று மாதத்தில் மூன்றாவது முறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025