மேலும் செய்திகள்
அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி
22 hour(s) ago
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
22 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
23 hour(s) ago
பந்தலுார் : பந்தலுாரில் இருந்து கூடலுார் செல்லும் சாலை ஓரத்தில் தேவகிரி பகுதி உள்ளது. சாலையை ஒட்டி உள்ள தோட்டத்தில் குடியிருப்பவர் சந்திரன். நேற்று முன்தினம் இரவு இந்த பகுதிக்கு வந்த ஒற்றை யானை, தோட்டத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.மேலும், இவரின் வீட்டின் முன் மற்றும் பின்பக்க ஜன்னல்கள் மற்றும் சுவர்களை உடைத்து உள்ளே இருந்த அரிசி மற்றும் உணவு பொருட்களை உட்கொண்டதுடன், துணிகள் மற்றும் பாத்திரங்களை வெளியே எடுத்து போட்டு சூறையாடி உள்ளது.இந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் சந்திரன் மற்றும் அவரது மனைவி ஓடி சென்று தப்பினர். பாதிக்கப்பட்ட குடியிருப்பை வனச்சரகர் சஞ்சீவி, கவுன்சிலர் சாகினா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். 'பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
23 hour(s) ago