உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளத்தில் விழுந்தஇன்ஜினியர் பலி

பள்ளத்தில் விழுந்தஇன்ஜினியர் பலி

குன்னூர்:குன்னூரில் தடை செய்யப்பட்ட மலை உச்சியில், குளவி தாக்கி, 300 அடி பள்ளத்தில் விழுந்து பலியான சுற்றுலா பயணியின் உடல் மீட்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 26. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் தொழில் நுட்ப இன்ஜினியர். இவருடன் தர்மபுரி. சேலம், மதுரை, பெங்களூரு, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐ.டி. ஊழியர்கள். இன்ஜினியர்கள், இன்ஸ்டாகிராம் நண்பர்களாக உள்ளனர்.இவர்கள் 10 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்று நேற்று முன்தினம் குன்னூர் கொலக்கம்பை அருகே உள்ள தடை செய்யப்பட்ட செங்குட்டுவராயன் மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.மாலையில் மலை அடிவார பகுதிக்கு 7 பேர் திரும்பி உள்ளனர். குளவி கூண்டு கலைந்ததால் அதில் பிரவீன்குமார் உட்பட 3 பேர் சிக்கி ஓட்டம் பிடித்தனர். தர்ஷத் என்பவர் அடிவார பகுதிக்கு வந்து சேர்ந்து தகவல் தெரிவித்தார். படுகாயமடைந்த வினோத் குமார், 29 படுகாயம் அடைந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.காணாமல் போன பிரவீன் குமாரை போலீசார், வனத்துறையினர் தீயணைப்புத் துறையினர் இரவில் தேடி கிடைக்காத நிலையில் நேற்று காலை மீண்டும் ட்ரோன் மூலம் மலைப் பகுதிகளில் தேடினர்.இதில், 300 அடி பள்ளத்தில் முகம் மற்றும் உடல் சிதைந்த நிலையில் உடல் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, கயிறு கட்டி தீயணைப்புத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உடலை ஒன்றரை கி.மீ., தூரம் சுமந்து வந்து ஆம்புலன்சில் ஏற்றினர்.குன்னூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.கொலக்கம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ