கேலோ இந்தியா போட்டியில் வெற்றி :கிராமத்துக்கு சாலை கேட்டு வந்த வீரர்
ஊட்டி;கோத்தகிரி தாலுகா, ஜெகதளா அருகே அமைந்துள்ள குண்டாடா கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்.சமீபத்தில் நடந்த, 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியில் பங்கேற்று, பளு துாக்கும் பிரிவில், வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 'இவர், தனது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்,' என, வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:குண்டாடா கிராமத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம், தனியார் பட்டா நிலம் நடைபாதையில் சென்று வருகிறோம். சாலை வசதி இல்லாததால், கிராம முதியோர், கர்ப்பிணி பெண்கள், மாற்று திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிக துாரம் உள்ள ஜெகதளா பஜார் பகுதிக்கு சென்று, தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.நீண்ட காலமாக சாலை வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள குண்டாடா கிராம மக்கள் நலன்கருதி, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.