உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

குன்னுார்; குன்னுாரில் நேற்று மதியம், 1:20 மணியில் இருந்து அரை மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதில், நகரின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அறிஞர் அண்ணா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மழை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கியது. பயணிகள் நடமாட சிரமப்பட்டனர். இதேபோல, ஓட்டுப்பட்டறை மோர்ஸ் கார்டன் சாலையில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கற்கள் சாலையில் தேங்கியதால், வாகனங்களை ஓட்டி சென்றவர்கள் சிரமப் பட்டனர். சந்திரா காலனி சாலை, டி.டி.கே., சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை