மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
குன்னுார்:ஜெகதளா பேரூராட்சியில், அ.தி.மு.க., கவுன்சிலர், 2 லட்சம் ரூபாய் செலவு செய்து நடைபாதை சீரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.குன்னுார் அருகே ஜெகதளா பேரூராட்சியில், ஆளும் கட்சியினர் தலைவர் பங்கஜம் மற்றும் அதே கட்சியை சேர்ந்த சில கவுன்சிலர்களுக்கு இடையே கோஷ்டி பூசல் நிலவுகிறது. இதனால், தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது. அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டு நிலை அதை விட பரிதாபமாக உள்ளது. இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பாலாஜி நகர் பகுதியில் நடைபாதையை, அ.தி.மு.க., கவுன்சிலர் சஜீவன், 2 லட்சம் ரூபாய் சொந்த செலவில் சீரமைத்தார். இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
20-Dec-2025
20-Dec-2025