உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆபத்தான நிலையில் மூங்கில்கள் அகற்றினால் அச்சமில்லை

 ஆபத்தான நிலையில் மூங்கில்கள் அகற்றினால் அச்சமில்லை

பந்தலுார்: 'பந்தலுார் அருகே மாநில எல்லை பகுதியான, பாட்டவயல் சோதனை சாவடி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மூங்கில்களை அகற்ற வலியுறுத்தப்பட்டு உள்ளது. பந்தலுார் அருகே, தமிழக எல்லையில் பாட்டவயல் போலீஸ் சோதனை சாவடி அமைந்துள்ளது. சோதனை சாவடியின் பின்பகுதியில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மூங்கில் வளர்ந்து சாய்ந்து, மின் கம்பிகள் மற்றும் சோதனைச் சாவடி மீது விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதியில் வாகனங்களுக்கு காத்திருக்கும் பயணிகள் நிற்பதுடன், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களும் நிற்கும் இடமாகவும் உள்ளது. மக்கள் கூறுகையில், 'பலத்த காற்று வீசினால் மூங்கில் மரங்கள், விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் முன்னர், இவற்றை அகற்ற வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்