உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை தாக்கி மூவர் காயம்; வனத்துறை விசாரணை -

யானை தாக்கி மூவர் காயம்; வனத்துறை விசாரணை -

பந்தலுார்; பந்தலுார் அருகே கரியசோலை வனப்பகுதியில் தீ தடுப்பு கோடு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மூன்று பேரை யானை தாக்கியதில் காயமடைந்தனர்.தேவாலா வனத்துறை சார்பில், கரியசோலை வனப்பகுதியில் தீ தடுப்பு கோடு வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் ஒப்பந்த முறையில், 12 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், வனப்பகுதியில் நடந்து வந்த ஒற்றை ஆண் யானை மூவரை தாக்கியது. தகவல் அறிந்த வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர், உடனடியாக சென்று மூவரையும் யானையிடமிருந்து மீட்டனர்.அதில், தேவாலா டான்டீயை சேர்ந்த கதிர்வேலு,69, காலில் பலத்தால் காயம் ஏற்பட்டு, ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும், அசோக்குமார்,56, சிவராஜ்,40, ஆகியோர் லேசான காயமடைந்த நிலையில், கூடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தொழிலாளர்கள் கூறுகையில், 'ஏற்கனவே தேயிலை தோட்டத்தில் இலை பறித்து கொண்டிருந்த இரண்டு பெண் தொழிலாளர்களை, யானை தாக்கி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் மூவர் யானையால் தாக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வனத்துறையின் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை