மேலும் செய்திகள்
குன்னுாரில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
17-May-2025
கோத்தகிரி: கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசனில் மே மாதம், 20 நாட்கள் மழை பெய்தது. அத்துடன், இ- பாஸ் நடைமுறை கட்டுபாடு காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகை, வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது.கோடை சீசன் நிறைவடைந்த நிலையில் மழை ஓய்ந்து, இதமான காலநிலை நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கோடநாடு காட்சி முனைக்கு வர தவறுவதில்லை. காட்சிமுனை கோபுரம் மற்றும் கீழ் பகுதியில் அமைந்துள்ள 'ராக்வியூ' பகுதியில் இருந்து, மலை முகடுகள், மேடநாடு, மாயாற்றின் அழகு மற்றும் தெங்கும ஹாடா பள்ளத்தாக்கு பகுதியை கண்டு ரசித்து, செல்பி எடுத்து செல்கின்றனர்.
17-May-2025