உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  வனப்பகுதியில் படுத்து நிம்மதியாக உறங்கிய யானை: கண்டு வியப்படைந்த சுற்றுலா பயணிகள்

 வனப்பகுதியில் படுத்து நிம்மதியாக உறங்கிய யானை: கண்டு வியப்படைந்த சுற்றுலா பயணிகள்

கூடலுார்: முதுமலை, தெப்பக்காடு வனப்பகுதியில் வளர்ப்பு யானை சங்கர் நிம்மதியாக உறங்குவதை கண்ட சுற்றுலா பயணிகள் 'போட்டோ' எடுத்து சென்றனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபயாரணயம் யானைகள் முகாமில் மூன்று குட்டிகள் உட்பட, 29 வளர்ப்பு பராமரித்து வருகின்றனர். வளர்ப்பு யானைகளுக்கு வனத்துறை சார்பில் காலை, மாலை அரிசி, கொள்ளு, ராகி உள்ளிட்ட சமைத்த உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தினமும் ரசித்து செலனர். காலை உணவுக்கு பின், வளர்ப்பு யானைகளை பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் வனப்பதிகளுக்கு அழைத்து சென்று மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். வளர்ப்பு யானைகள் நண்பகல் நேரத்தில் நிலவும் வெயிலில் தாக்கத்தை சமாளிக்க, மர நிழல்களில் ஓய்வெடுப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், தெப்பக்காடு அருகே மேய்ச்சலுக்கு விடப்பட்ட 'சேரம்பாடி' சங்கர் என்ற வளர்ப்பு யானை, வனப்பகுதியில், மதியம் படுத்து நிம்மதியாக உறங்கியது. அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், யானை படுத்து உறங்குவதை வியந்து ரசித்து 'போட்டோ' எடுத்து சென்றனர். சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'முதுமலையில் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்குவதை மட்டுமே பார்க்க முடியும். இந்நிலையில், வனத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட வளர்ப்பு யானை, உச்சி வெயில் நேரத்தில், படுத்து உறங்கி ஓய்வெடுத்த காட்சி வியப்பாக இருந்தது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை