மேலும் செய்திகள்
ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் மகோற்சவ விழா துவக்கம்
7 hour(s) ago
மீண்டும் மாட்டை கொன்ற புலி அச்சத்தில் உள்ளூர் மக்கள்
7 hour(s) ago
ஊராட்சி பெயரை மாற்ற கலெக்டரிடம் மனு
7 hour(s) ago
குன்னுார்:குன்னுார் மார்க்கெட் கடைகளுக்கு வாடகை வசூலுக்கு வரும் அதிகாரிகள், அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குன்னுார் நகராட்சியின் கட்டுப்பாட்டில் மார்க்கெட் உட்பட சுற்றுப்புற பகுதிகளில், 910 கடைகள் உள்ளன.தற்போது, பெரும்பாலான கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளன. இதற்கான தீர்வு காண நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை.இந்நிலையில், நேற்று நகராட்சி கமிஷனர் பர்ஜானா தலைமையில் அதிகாரிகள் வாடகை பாக்கி தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.வியாபாரிகள் கூறுகையில், 'அபாயகரமான கட்டடங்களை சீரமைக்கவில்லை. ஆண்டிற்கு, 5 கோடி வரை வாடகை வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம், போதிய அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. மவுன்ட் ரோடு, வி.பி., தெருவில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாலும், பார்க்கிங் வசதி இல்லாததாலும், மார்க்கெட் வரும் மக்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர்,' என்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago