மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
குன்னுார் : குன்னுார்- ஊட்டி மலை ரயில் அவ்வப்போது 'பிரேக்ஸ் மேன்' இல்லாமல் இயக்கப்படுவதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.ஊட்டி, குன்னுார் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலுக்கு பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். குன்னுார் முதல் மேட்டுப்பாளையம் வரையிலான மலைப்பாதையில், பல்சக்கரத்தில் இயங்கும், மலை ரயிலின் பெட்டிகள் பாதிப்பு இல்லாமல் இருக்க பிரேக் பிடித்து இயக்கப்படுகிறது. இதற்காக இந்த மலை ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு பிரேக்ஸ் மேன் உள்ளனர்.சமீப காலமாக, ஊட்டி- குன்னுார் இடையே ஒருசில பெட்டிகளில் பிரேக்ஸ் மேன் இல்லாமல் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் போது விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளது.ஓய்வு பெற்ற முன்னாள் சீனியர் பிரேக்ஸ் மேன் வாசுதேவன் கூறியதாவது:மலை பகுதியான, நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைத்த மலை ரயில் பாதை குறிப்பிட்ட டிகிரியில் தாழ்வாக செல்கிறது. இவ்வாறு உள்ளதால் ஒவ்வொரு பெட்டிக்கும் பிரேக் பொருத்தப்பட்டு அதற்காக பிரேக்ஸ் மேன் நியமிக்கப்பட்டு உள்ளனர். ரயில்வே விதிமுறைகளில் கூறியது படி பிரேக்மேன் கட்டாயம் இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில், ரயிலில் மரம் விழுந்தாலோ, பாறை கற்கள் விழுந்தாலோ உடனடியாக அந்த பெட்டியில் பிரேக் இடுவதன் மூலம் ரயில் தடம்புரண்டு செல்வது தடுக்கப்பட்டு பயணிகள் உயிர்கள் காக்கப்படும். மலை ரயில் பாலக்காடு டிவிஷனில் கட்டுப்பாட்டில் இருந்த போது ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள், ஒவ்வொரு பெட்டியிலும் பிரேக் இல்லாமல் இயக்கி ஆய்வு செய்தனர். அப்போது, மலை ரயிலின் வேகம் அதிகரித்து கவிழும் அபாயம் ஏற்பட்டதால், 'கட்டாயம் பிரேக்ஸ் மேன் இல்லாமல் மலைரயில் இயக்க கூடாது,' என்ற உத்தரவை மீண்டும் எழுதி வைத்து சென்றுள்ளனர். ரயில்வே வாரியம் பயணிகளின் பாதுகாப்புக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் பிரேக்ஸ் மேன் இல்லாமல் இயக்குவது கவலையை அளிக்கிறது. ரயில்வே விதிமுறைகள் படி மலை ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு வாசுதேவன் கூறினார்.சேலம் கோட்ட ரயில்வே மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மரியமைக்கேல் கூறுகையில்,''இது போன்று 'பிரேக்ஸ் மேன்' குறிப்பிட்ட பெட்டிகளில் இல்லாமல் இயக்கியது பற்றி சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளிடம் விசாரிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவுகளில் மாற்றங்கள் செய்துள்ளார்களா என்பது குறித்தும் கேட்கப்படும். ரயில் பயண பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான தீர்வு காணப்படும்,'' என்றார்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025