| ADDED : ஜன 21, 2024 10:44 PM
ஊட்டி:லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம், தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், பொது மக்களுக்கு தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.அதன் ஒரு கட்டமாக, ஊட்டியில் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். இதில், தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள், இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, ஆர்.டி.ஓ.,கள் மகாராஜன், பூஷ்ணகுமார் , முகமது குதரதுல்லா , தேர்தல் தாசில்தார் சீனிவாசன் உட்பட அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.