உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடகள நடுவர்களுக்கு பயிற்சி பட்டறை

தடகள நடுவர்களுக்கு பயிற்சி பட்டறை

பெ.நா.பாளையம், : பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில் தடகள நடுவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.கல்லூரி முதல்வர் ஜெயபால் வரவேற்றார். செயலாளர் சுவாமி வீரகானந்தா தலைமை வகித்தார். நடுவர் தேர்வு குழு இணை தலைவர் சீனிவாசன் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார். முதல் நாளில் தடகள விதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறை மற்றும் தடகள நடுவர்களுக்கான பணி பொறுப்புகள், செய்முறை வகுப்புகள் உள்ளிட்ட அமர்வுகள் நடந்தன.இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், எழுத்து மற்றும் வாய்மொழி தேர்வுகள் நடந்தன. இதில், உடற் கல்வியியல் பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள், உடற் கல்வியியல் மாணவர்கள், விளையாட்டுத்துறை நிர்வாகிகள் மற்றும் தடகள பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.நிறைவு விழாவில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி இணை பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அமுதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை