உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பில்லாத நடைபாதை; தடுக்கி விழும் அபாயம்

பராமரிப்பில்லாத நடைபாதை; தடுக்கி விழும் அபாயம்

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் இருந்து, குன்னுார் பஸ் நிறுத்தம் இடையே, நடைப்பாதை சேதமடைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கட்டபெட்டு பஜார், கக்குச்சி, நடுஹட்டி ஊராட்சி மற்றும் ஜெகதளா பேரூராட்சியின் எல்லையாக அமைந்துள்ளது. பஜாரில் இருந்து, ஜெகதளா நகராட்சிக்கு சொந்தமான நடைபாதையை, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நடைபாதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.இதனால், நடைபாதையில் கான்கிரீட் பெயர்ந்து குழிகள் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. தவிர, தண்ணீர் குழாய்கள் நடைபாதையின் குறுக்கே பொருத்தப்பட்டுள்ளது. இதனால், நடந்து சென்று வருவோர் தடுக்கி விடும் நிலை உள்ளது. கடந்த காலங்களில் பலர் விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !