உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் அகற்றப்படாத மரம்: மக்கள் சென்றுவர இடையூறு

சாலையில் அகற்றப்படாத மரம்: மக்கள் சென்றுவர இடையூறு

ஊட்டி;ஊட்டி அருகே, வெட்டப்பட்ட மரம் அகற்றாமல் உள்ளதால், வாகனங்கள் மற்றும் மக்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.ஊட்டி புதுமந்து பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இங்குள்ள பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அப்பகுதியில் இருந்த ராட்சத கற்பூர மரம் வெட்டப்பட்டு, சாலையோரத்தில் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் மற்றும் மக்கள் சிரமத்திற்கு இடையே சென்று வரவேண்டிய நிலை உள்ளது. மேலும், எதிரில் வரும் வாகனங்களுக்கு ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெட்டப்பட்ட மரத்தை உடனடியாக அகற்றி, போக்குவரத்து சீராக சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை