மேலும் செய்திகள்
பூட்டிய வீட்டில் நகை,பணம் திருடியவர் கைது
21 hour(s) ago
கலை திருவிழா போட்டி மாணவர்கள் அசத்தல்
04-Sep-2026
சிறப்பு பராமரிப்பு பணி
04-Sep-2026
சிறுவாணி ஆற்றில் முதியவர் சடலம் மீட்பு
04-Sep-2026
ஊட்டி: ஊட்டி நகரின் பிரதான கால்வாயாக கோடப்பமந்து கால்வாய் விளங்குகிறது. நகரின் கழிவு நீர் , மழை நீர் இந்த கால்வாயில் கலக்கிறது. கால்வாயில் வரும் தண்ணீர் படகு இல்ல மையப் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட பின், படகு இல்ல ஏரியில் கலக்கிறது. கால்வாயை தூர்வார சம்மந்தப்பட்ட துறையினர் போதிய அக்கறை காட்டாததால் குப்பை , நெகிழி கால்வாயில் பெருகியதால் புதர் மண்டி கிடக்கிறது. குப்பை கழிவுகளால் மழை சமயத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு நகரில் உள்ள பல குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது. தவிர, விதிகளை மதிக்காமல் சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் வீசியெறியும் டன் கணக்கிலான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் கால்வாயை முழுமையாக அடைக்கிறது. கால்வாயை சுற்றியுள்ள வணிக வளாகங்கள் , உணவகங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் மனித கழிவுகளும், சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீரும் நேரடியாக இதில் திறக்கப்படும் சட்ட விரோத செயல்களும் நடக்கிறது. கடும் துர்நாற்றம் இக்கால்வாய் வழியாக வரும் சேறும் , சகதியும் குப்பைகளும் ஏரியின் அடியில் படிந்து வருவதால் படகு இல்ல ஏரியும் மாசுபட்டு வருகிறது. இதனால்,ஏரியின்பாதி அளவில் ஆகாயதாமரை பரவி அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாக்கடை நீர் பரவி , கடுமையான தூர்நாற்றம் வீசுவதால் அங்கு படகு சவாரி செய்ய சுற்றுலா பயணியர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,‘கடந்த காலங்களில் பல்வேறு நிதியின் வாயிலாக , 10 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கி தூர்வாரவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தரமில்லாத பணிகளால் மீண்டும் கால்வாய் மோசமான நிலைக்கு மாறி உள்ளது. அவல நிலையை மாற்ற சம்மந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு தரமான தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்,’ என்றனர்.
21 hour(s) ago
04-Sep-2026
04-Sep-2026
04-Sep-2026