மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கோத்தகிரி;- கோத்தகிரி 'ரைபிள் ரேஞ்ச்' சதுப்பு நிலத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். கோத்தகிரி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற கலெக்டர் சுர்ஜித் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசுகையில், ''சதுப்பு நிலங்களை பாதுகாப்பது மிக முக்கியம். இது, அரசின் தலையாய கடமை. இந்த விவகாரத்தில், அதிகாரிகள் காட்டும் மெத்தனப்போக்கு வருத்தம் அளிக்கிறது. பொது மக்கள் விழிப்புணர்வு அடைந்தால் மட்டுமே, இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும்,'' என்றார்.லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ பேசுகையில்,''ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம், கோத்தகிரி நகர மக்களின் ஒரே குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த சதுப்பு நிலம் பொதுமக்கள் மற்றும் அரசின் அக்கரையின்மையால், அழியும் நிலையில் உள்ளது. இதனை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை,'' என்றார். நிகழ்ச்சியில், ஹில்போர்ட் , சத்தியகாத்தி மற்றும் ரிவர்சைடு பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று, அப்பகுதியில் குவிந்திருந்த குப்பை கழிவுகளை அகற்றி துாய்மை பணியில் ஈடுபட்டனர்.கோத்தகிரி பேரூராட்சி பஞ்சாயத்து தலைவர் ஜெயகுமாரி, முன்னாள் தலைவர் போஜன், வன பாதுகாப்பு குறித்து பேசினர். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தேவராஜ் வரவேற்றார். செயலாளர் நஞ்சன் நன்றி கூறினார்.
03-Oct-2025