உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குந்தா நீரேற்று திட்டப்பணியை விரைவில் முடிக்க காலநிலை கைகொடுக்குமா? டிச., இறுதிக்குள் மின் உற்பத்தி துவக்க தீவிர முயற்சி

குந்தா நீரேற்று திட்டப்பணியை விரைவில் முடிக்க காலநிலை கைகொடுக்குமா? டிச., இறுதிக்குள் மின் உற்பத்தி துவக்க தீவிர முயற்சி

ஊட்டி; குந்தா நீரேற்று மின் திட்டத்தில், 250 மெகாவாட் பணிகள், காலநிலை மாற்றத்தால் தாமதமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே காட்டுகுப்பையில், 1,850 கோடி ரூபாயில், 4 பிரிவுகளில் (ஒரு பிரிவில்,125 மெகாவாட் வீதம்) 500 மெகாவாட் உற்பத்திக்கான, குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து கட்டுமான மற்றும் மின் சாதனங்களை பொருத்தும் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முதல் பிரிவுக்கான, 125 மெகாவாட் மின் உற்பத்தி பணி கடந்த, 2015ம் ஆண்டு துவங்கியது. அடிக்கடி ஏற்பட்ட மழை காரணமாகவும், நிர்வாக பணியில் ஏற்பட்ட இடையூறுகளாலும் குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிக்க முடியாமல் பணிகள் தாமதமாகியது. மின் வாரிய உயர் அதிகாரிகள் ஆய்வு கடந்தாண்டு நவ., மாதம்; நடப்பாண்டு, மார்ச் மாதம் ஆய்வு மேற்கொண்ட மின் வாரிய உயர் அதிகாரிகள் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி, குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் நடக்கும் பகுதியை ஒட்டியுள்ள எமரால்டு அணை, நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் முழு கொள்ளளவில் இருப்பதால் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் சூழல் இருந்தது. இதனை தவிர்க்க, எமரால்டு அணை, போர்த்தி மந்து அணைகளில், 70 சதவீதம் அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மழை அதிகரிப்பதால் சிக்கல் இந்நிலையில் அதிகரித்த மழை பொழிவால், குறிப்பிட்ட அணைகளில் தண்ணீர், 80 சதவீதம் அளவுக்கு நிரம்பியது. கட்டுமான பணிக்கு பாதிப்பு நேரிடும் பட்சத்தில் தேவைப்படும் அளவுக்கு தண்ணீர் வெளியேற்ற மின் வாரியம் திட்டமிட்டுள்ளனர். எனினும், காட்டு குப்பை மின் திட்ட பணி வளாகத்தில் நவீன மின்சாதன கருவிகள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அங்கு நிலவும் காலநிலை மாற்றத்தால் பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'குந்தா நீரேற்று மின் திட்ட பணி, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள, 4 பிரிவுகளில் தலா 125 மெகாவாட் வீதம் 500 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 2 பிரிவுக்கான, 250 மெகாவாட்டுக்கான மின் உற்பத்தியை நடப்பாண்டு டிச., இறுதிக்குள் மின் உற்பத்தி துவக்க உள்ளோம். சம்மந்தப்பட்ட பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பணிகள் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனினும், பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக பணிகள் விரைவாக நடந்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை