மேலும் செய்திகள்
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024
பந்தலுார்; பந்தலுார் அருகே கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பந்தலுார் சுகாதார நிலையம்; கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, டாக்டர் சிகாப் தலைமை வகித்து பேசுகையில், ''நோய்களில் தொற்று மற்றும் தொற்றா நோய்கள் என இரண்டு வகைகள் உள்ளன. தீய பழக்கங்களை தவிர்க்கும் போது ரத்த அழுத்தம், இதய அடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க இயலும். ''அதேபோல், சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்து கொள்வதன் மூலம் தொற்று நோய்கள் பரவுவதையும் தடுக்க முடியும்,'' என்றார். தொடர்ந்து, டாக்டர் ஜனார்த்தனன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் ஆகியோர், 'உடற்பயிற்சி மேற்கொள்வது; முறையாக உணவு உட்கொள்ளும் போது கிடைக்கும் பயன்கள்; ஊட்டச்சத்து குறைபாடு மூலம் ஏற்படும் நோய்கள்; அவற்றை தடுப்பதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள்,' குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து, உப்புகளில் அயோடின் அளவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் கனையேந்திரன், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். 'ஆல் தி சில்ட்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் நன்றி கூறினார்.
10-Dec-2024
03-Dec-2024