மேலும் செய்திகள்
தப்பிய போக்சோ கைதி கேரளாவில் கைது
29-Nov-2025
கைதி தப்பி ஓட்டம்; 2 போலீசார் சஸ்பெண்ட்
25-Nov-2025
இன்ஸ்பெக்டர் மரணம் பணிச்சுமை காரணமா?
19-Nov-2025
பாதை யில் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுப்பு
18-Nov-2025
பெரம்பலுார்:சேலம் மாவட்டம், செந்தாரப்பட்டி மாதா கோவில் தெருவில் சேர்ந்தவர் தாமோதரன், 44. அவரை அணுகிய நபர் ஒருவர், பெரம்பலுார் மாவட்டம் பாப்பாங்கரை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம், 2022ல் அழைத்து சென்றார். இருவரும் சேர்ந்து, மிளகாய் வியாபாரம் செய்யலாம் என, சுரேஷ் ஆசைவார்த்தை கூறினார். மேலும், தாமோதரனுக்கு, 166 கிலோ மிளகாய் மூட்டையை அனுப்பி வைத்து, நம்ப செய்தார். இதையடுத்து, பல தவணைகளாக, 53.78 லட்ச ரூபாயை தாமோதரன் அனுப்பி வைத்தார். ஆனால், மிளகாய் தரவில்லை; கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. சுரேஷை சந்தித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பெரம்பலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிய கோரி, தாமோதரன் மனு செய்தார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாவட்ட போலீசார் சுரேஷ் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
29-Nov-2025
25-Nov-2025
19-Nov-2025
18-Nov-2025