மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
பெரம்பலுார்:சேலம் மாவட்டம், ராயர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி, 49. இவர், 2022ல், 'ஐஷர்' லாரியை ஆத்துாரிலிருந்து பெரம்பலுார் நோக்கி ஓட்டி சென்றார். பெரம்பலுார் மாவட்டம், கோனேரிபாளையம் பிரிவு ரோடு அருகே லாரி வந்தபோது, அப்பகுதியில், 'யமஹா' டூவீலரில் சென்று கொண்டிருந்த இருவர் மீது மோதியது.இதில், மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ், 20, பெரம்பலுார் திருநகரை சேர்ந்த குணாலன், 20, இறந்தனர். இதுகுறித்து, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு பெரம்பலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ் நேற்று தீர்ப்பளித்தார். அதில், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் லாரியை ஓட்டி, விபத்து ஏற்படுத்தி, இருவர் உயிரிழக்க காரணமாக இருந்த கண்ணுசாமிக்கு, ஓராண்டு சிறை தணடனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025