உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / பெரம்பலுாரில் இருந்து சென்னைக்கு பஸ் இல்லாததால் பயணியர் மறியல் 

பெரம்பலுாரில் இருந்து சென்னைக்கு பஸ் இல்லாததால் பயணியர் மறியல் 

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சென்னையில் பணியாற்றுகின்றனர். அதேபோல, நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் சென்னையிலுள்ள கல்லுாரிகளில் படிக்கின்றனர். இவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊரான பெரம்பலுார் மாவட்டத்திற்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல, விடுமுறையில் சொந்த ஊர் வந்த பலரும், மீண்டும் சென்னை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல, பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர். 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும், சென்னை செல்ல பஸ்கள் வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சென்னை வாழ் பெரம்பலுார்வாசிகள் பெரம்பலுாரிலிருந்து சென்னைக்கு உரிய பஸ் வசதி இல்லை என குற்றஞ்சாட்டி, இரவு 11:00 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த, பெரம்பலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். பஸ் வசதி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.பயணிகளின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை