உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / மணல் திருட்டு 3 வாகனங்கள் பறிமுதல்

மணல் திருட்டு 3 வாகனங்கள் பறிமுதல்

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், டி.கீரனுார் பகுதியில் கிராவல் மண் திருட்டு நடப்பதாக நேற்று முன்தினம் இரவு மங்கலமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்கள் வாகனங்களை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். கிராவல் மண் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட எறையூர் எஸ்.எல்.ஆர்., காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரி, ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் கீரனுார் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் உள்ளிட்ட 3 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த3 வாகனங்களையும் மங்கலமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். இந்த மணல் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுபோன்று உரிய அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்வதோடு, அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !