உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / குடும்பத்தகராறு பெண் தீக்குளித்து தற்கொலை

குடும்பத்தகராறு பெண் தீக்குளித்து தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே குடும்பத்தகராறால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி அம்மு (26). இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பரணிதரன் (3), சாதனாஸ்ரீ (1) என்ற குழந்தைகள் உள்ளனர். ஆனந்துக்கும், அம்முவுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு வருவது வழக்கம்.கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி காலை ஆனந்துக்கும், அம்முவுக்கும் குடும்பத்தகராறு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அம்மு மதியம் 3 மணியளவில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அம்முவை இவரது உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருச்சி கீதாஞ்சலி மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்மு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.பாடாலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ