உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / விபத்தில் தீப்பற்றிய கா;ர் ஏழு பேர் உயிர் தப்பினர்

விபத்தில் தீப்பற்றிய கா;ர் ஏழு பேர் உயிர் தப்பினர்

மங்கலமேடு : சென்னை, ஆவடி, கவுரிப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் - சிவராணி தம்பதி, சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு, 'மாருதி 800' காரில் சென்று கொண்டிருந்தனர். காரை செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், பெரம்பலுார் மாவட்டம், மங்கலமேடு மின்வாரிய ஆபீஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது, நாய் குறுக்கே வந்ததால், செந்தில்குமார் திடீரென பிரேக் போட்டார். பின்னால் சென்னையில் இருந்து திண்டுக்கல்லை நோக்கி வந்த டாடா இண்டிகா கார், மாருதி 800 கார் மீது மோதி, பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.அந்த காரை ஓட்டி வந்த திண்டுக்கல், கனப்பாடி நல்லையா, அவரது மனைவி சத்தியா, ஒரு வயது குழந்தை மதுமித்ரன், உறவினர்களான நாகராஜ் - சரஸ்வதி தம்பதி, அவர்கள் குழந்தைகள் இலக்கியா, சபரிநாதன், ஆகிய ஏழு பேரும் காயமடைந்தனர். தீப்பிடித்த காரில் இருந்த 12 லட்சம் ரூபாய் எரிந்து நாசமானதாக தெரிகிறது. மங்கலமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை