உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / எம்.எல்.ஏ., யாரும் அமைச்சராக பதவி ஏற்க உரிமை உண்டு: அமைச்சர் ரகுபதி

எம்.எல்.ஏ., யாரும் அமைச்சராக பதவி ஏற்க உரிமை உண்டு: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை:''உச்ச நீதிமன்றம் தமிழக கவர்னருக்கு கொட்டு கொட்டியுள்ளது.ஆனால், அவருக்கு வலிக்காது. ஏனென்றால் அவருக்கு இரும்பு தலை என்று நினைக்கிறேன். சட்டசபை உறுப்பினராக உள்ள எவரும் அமைச்சராக பதவி ஏற்பதற்கு உரிமை உண்டு,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் அவர் கூறியதாவது:உச்சநீதிமன்றம் தமிழககவர்னருக்கு கொட்டு கொட்டியுள்ளது. ஆனால், அவருக்கு வலிக்காது. ஏனென்றால் அவருக்கு இரும்பு தலை என்று நினைக்கிறேன். சட்டசபை உறுப்பினராக உள்ள எவரும், அமைச்சராக பதவி ஏற்பதற்கு உரிமை உண்டு. கவர்னரின் செயல் கவலை அளிக்கிறது என, மத்திய அரசின் வழக்கறிஞரே கூறியிருப்பது, இவரின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை காட்டுகிறது.சட்டசபை உறுப்பினராக உள்ள விதிமுறை தான், அமைச்சராக உள்ளவர்களுக்கும். பொன்முடி சட்டசபை உறுப்பினராக இருப்பதற்கு தகுதியுடையவராக இருப்பதால், அவர் அமைச்சராவதற்கும் தகுதி உள்ளது. அதன் அடிப்படையில் தான், முதல்வர் அவரை மீண்டும் அமைச்சராக வேண்டும் என்று கவர்னருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால், கவர்னர் மேதாவி என்பதால், சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு சொல்வதாக கூறிவிட்டு, கடைசியில் முடியாது என்று கூறிவிட்டார். அதற்கு தான் உச்ச நீதிமன்றம் நல்ல கொட்டு கொட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி