உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுகை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு: மனு கொடுத்து போராட்டம்

புதுகை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு: மனு கொடுத்து போராட்டம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, கடந்த மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மாநகராட்சியில் திருக்கட்டளை, தேக்காட்டூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. இதற்கு திருக்கட்டளை, தேக்காட்டூர் உள்ளிட்ட பல ஊர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.தொடர்ந்து, மாநகராட்சியோடு இணைத்தால், நுாறு நாள் வேலைத்திட்டம் பறிபோகும்; வரி உயர்த்தப்படும் என்பதால் மாநகராட்சியோடு இணைக்க கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், 'வேண்டாம் மாநகராட்சி கூட்டமைப்பு' சார்பாக நேற்று, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, புதுக்கோட்டை மாநகராட்சியோடு 11 ஊராட்சிகளை இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்ற கோரி, கோரிக்கை மனுக்களை அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்