மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு மாங்குட்டிபட்டியை சேர்ந்தவர் விவசாயி, வெங்கடேசன், 40. இவர், தொழிலாளர் தினத்தையொட்டி மே 1-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தார். ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிறையில் வெங்கடேசனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அங்கிருந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலையில் சேர்க்கப்பட்டார். பின், சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரிழந்தார். இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பிரேத பரிசோதனை செய்வதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதை கண்டித்து, வடகாடு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட ஏராளமானோர் நேற்று திரண்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். பின், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் உறவினர்கள் மனு அளித்தனர்.அதில், கைது செய்யப்பட்ட வெங்கடேசனை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தாக்கியுள்ளனர்; சிறைத்துறையினரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, இந்த விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025