உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / குழந்தைகள் காப்பகத்தில் தப்பிய 2 சிறுமியர் மீட்பு

குழந்தைகள் காப்பகத்தில் தப்பிய 2 சிறுமியர் மீட்பு

திருக்கோகர்ணம்:புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு 18 வயதிற்கு உட்பட்ட சிறுமியர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன், இந்த காப்பகத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுமியர் மூன்று பேர், பின் பக்க சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். இது தொடர்பாக, காப்பக அதிகாரி பரமேஸ்வரி, திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, தப்பியோடிய சிறுமியரை மீட்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.தொடர்ந்து, திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள அவர்களின் வீடுகளில் இரண்டு சிறுமியர் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அங்கு சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் மீட்டு வந்தனர். பின், புதுக்கோட்டை சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். மற்றொரு சிறுமியை தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை