மேலும் செய்திகள்
தாலுகா ஆபீஸ் முன் ஆடுடன் பெண் போராட்டம்
27-Nov-2025
குவாரி விதிமீறல் வழக்கு
19-Nov-2025
மினி லாரி மோதி தம்பதி உயிரிழப்பு
11-Nov-2025
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வாண்டாகோட்டையைச் சேர்ந்தவர் ராமையா. 72; அ.தி.மு.க., புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொருளாளராக இருந்தார். இவர், நேற்று காலை அவரது வயலுக்கு சென்று விட்டு, வாண்டாகோட்டையில் உள்ள வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பூவரசக்குடி சாலையில் திரும்பிய போது, பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வல்லத்திராகோட்டையைச் சேர்ந்த ஆதர்ஷ், 23, என்பவரிடம், வல்லத்திராகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Nov-2025
19-Nov-2025
11-Nov-2025