மேலும் செய்திகள்
குவாரி விதிமீறல் வழக்கு
19-Nov-2025
மினி லாரி மோதி தம்பதி உயிரிழப்பு
11-Nov-2025
தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தை மீட்பு
11-Nov-2025
அறந்தாங்கி: அறந்தாங்கியில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மாற்றுத்திறனாளிக்கான ஸ்கூட்டர் வழங்கப்படாத நிலையில், ஸ்கூட்டரை சர்வீசுக்கு எடுத்து வருமாறு அழைப்பு வந்ததால், அதிர்ச்சியடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பூவற்றகுடி பகுதியைச் சேர்ந்த கலையரசன், 21, மாற்றுத்திறனாளி. பட்டப் படிப்பு முடித்து, வீட்டில் உள்ளார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிக்கான நான்கு சக்கர ஸ்கூட்டர் கேட்டு, சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கான ஸ்கூட்டர் இதுவரை வழங்கப் படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன், அவருக்கு ஸ்கூட்டருக்கான ஆர்.சி., புத்தகம் வந்தது. மேலும், அந்த ஸ்கூட்டரை சர்வீசுக்கு எடுத்து வருமாறு அழைப்பும் வந்தது. வழங்காத ஸ்கூட்டரை சர்வீசுக்கு எப்படி எடுத்து செல்வது என்று அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, கலையரசன் நேற்று முன்தினம், தன் தாயுடன் சென்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து முறையிட்டார். அமைச்சர் மெய்யநாதன், ''உடனடியாக, மாற்றுத்திறனாளி கலையரசனுக்கு கால தாமதம் இன்றி ஸ்கூட்டர் வழங்க வேண்டும்,'' என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
19-Nov-2025
11-Nov-2025
11-Nov-2025