மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தவர் கருப்பையா, 50. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.அதன்படி, அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள், கடந்த வாரம் அப்பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் தலைமையாசிரியர் கருப்பையா பல்வேறு முறைகேடு செய்திருப்பது தெரிய வந்ததால், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்தார்.நேற்று அந்த உத்தரவை பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் கருப்பையாவிடம் வழங்க வட்டார கல்வி அலுவலர்கள் கவிதா, கருணாகரன் உள்ளிட்டோர் சென்றபோது அவர்கள் வருவதை அறிந்த தலைமையாசிரியர் கருப்பையா, தலைமறைவாகி விட்டார். தமிழக மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் நிதி முறைகேடு உள்ளிட்ட காரணங்களால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025