உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுகையில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

புதுகையில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை விட்டோபா பாண்டுரங்கன் கோயிலில் பூட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்து உண்டிகளை உடைத்து உண்டியலில் இருந்த பணம் மட்டும் காணிக்கை பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர் புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் அமைந்துள்ள விட்டோபா பாண்டுரங்கன் கோயில் புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இக்கோவில் பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவிட்டுதங்களது காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி விட்டு செல்வது வழக்கம் இன்று மதியம் கோவில் அர்ச்சகர் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டு மாலை திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது கோவிலில் போட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது சம்பவம் குறித்து அர்ச்சகர் உடனடியாக காவல்துறைக்கு கொடுத்துவிட்டு கோவிலுக்குள் சென்று பார்த்த போது கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்த வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவு செய்தனர் இது தொடர்பாக புதுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் மற்றும் பொருள்களை மதிப்பு குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோவிலில் இரவு காவலர் கிடையாது. சி.சி.டி. கேமரா பொருத்தப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ