உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை /  தாலுகா ஆபீஸ் முன் ஆடுடன் பெண் போராட்டம்

 தாலுகா ஆபீஸ் முன் ஆடுடன் பெண் போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ம், ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூழையன்காட்டைச் சேர்ந்தவர் தினகரசாமி மகன் மணவழகன், 50. இவர், தன் விவசாய தோட்டத்தில் உள்ள பயன்பாடாத கிணற்றை மூடுவதற்காக ஆலங்குடி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையை கொட்டுவதற்கு அனுமதித்துள்ளார். இந்த கழிவுகளால் தொற்று நோய் பரவி ஆடுகள் உயிரிழந்து வருவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். கூழையன்காட்டை சேர்ந்த தர்மராஜ் மனைவி வள்ளி, 48, என்பவரின் ஆடு நேற்று உயிரிழந்தது. அந்த ஆட்டை, தாலுகா அலுவலக நுழைவாயிலில் போட்டு, அந்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் கொட்டப்பட்ட கழிவுகளால், குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை குடித்த ஆடு உயிரிழந்து விட்டதாகவும் கூறினார். தொடர்ந்து, அங்கு வந்த தாசில்தார் வில்லியம்மோசஸ், அந்த பெண்ணுடன் பேச்சில் ஈடுபட்டார். சுகாதார துறையினரை சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். பின், அந்த ஆட்டை வள்ளி எடுத்துச்சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ