உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் இந்துவாக மாறிய கிறிஸ்தவர்கள்

ராமேஸ்வரத்தில் இந்துவாக மாறிய கிறிஸ்தவர்கள்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மூன்று கிறிஸ்தவ குடும்பத்தினர் இந்துவாக மாறினர். மதுரை மாவட்டம் சக்திமங்களம் இளமனூரை சேர்ந்த ஜோசப், மனைவி வேலம்மாள், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பெரியகுளத்தை சேர்ந்த மணிவேல், மனைவி ஜெயராணி, மகன்கள் இயோன், மகாராஜ், கருப்பசாமி, மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த கென்னடி, மரியசூரன், அருள்பிரான்சிஸ் மற்றும் ஜென்சி ஆகியோர் நேற்று காலை ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு வந்தனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு விருப்பமான இந்துப்பெயர்கள் சூட்டப்பட்டு சங்கல்பம் செய்யப்பட்டது. இவர்களுக்கு உமாசங்கர் ஷர்மா, இந்துப்பெயர்களை முன்மொழிந்தார். இதை தொடர்ந்து இவர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடினர். பின் மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டனர். ராமநாதசுவாமியை தரிசித்தனர். இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில செயலாளர் சுடலைமணி, மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, நகர் தலைவர் மாரியப்பன், ஒன்றிய தலைவர் தனபாலன், நகர் துணை தலைவர் முனியசாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை