உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு

பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு

கீழக்கரை : கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள செய்யது சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் அல்மஸ்ஜிதுர் ரயான் பஜார் பள்ளியில் நேற்று புதிய நிர்வாகிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் தலைமை வகித்தார். மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் முன்னிலை வகித்தார்.முகமது மன்சூர், அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.தலைவராக ஜஹாங்கீர் அரூசி, துணைத்தலைவராக செய்யது இப்ராஹிம் மரைக்கார், செயலாளராக எம்.எம்.கே.அகமது ரசீது இப்ராஹிம், துணைச் செயலாளராக காதர் உசேன், சபீர் அகமது, பொருளாளராக ஹாஜா முகைதீன், நிர்வாக உறுப்பினர்களாக ரியாஸ் செய்யது பிலால், சபி அகமது, சாகுல் ஹமீது, இன்ஜினியர் ஆசாத் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்பள்ளியின் இமாம் கிராத் ஓதி துவக்கி வைத்தார். பள்ளிவாசலின் மூலமாக ஏழை மக்களுக்கு தேவையான மருத்துவம், கல்வி, திருமணம் நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடப்பாண்டில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டியும், அதிக மதிப்பெண் பெற்ற கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா ஜனனிக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை